search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் இரும்பு ஆலை"

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அம்மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.



    இந்நிலையில், இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    ×